விமான நிலையங்களில் பயணப்பை தொடர்பான புகார்கள் அதிகரிப்பு

விமான நிலையங்களில் பயணப்பை தொடர்பான புகார்கள் அதிகரிப்பு

1 mins read
bbe7516d-0fd3-44a6-a4ca-a3f7f0d8480a
படம்: ஏஎஃப்பி -

உலகில் விமானப் பயணங்கள் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளன, ஆனால் பயணப்பை தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன.

பயணப்பைகள் காணாமல் போவது, சேதமடைவது அல்லது பயணப்பை தாமதமாகக் கிடைப்பது என 2022ஆம் ஆண்டு புகார்கள் இரு மடங்கு கூடியது.

கொவிட்-19 நோய்த்தொற்றின் போது விமானத்துறைக்குப் பலத்த அடி விழுந்தது. அதனால் அத்துறை ஊழியர்கள் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஆனால் இப்போது பயணத்துறை மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளதால். அத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லாமல் தடுமாறுகிறது.

சிட்டி எனும் நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வில் 1000 பயணிகளில் 7.6 விழுக்காட்டினர் பயணப்பைகள் தொடர்பாகப் புகார் கொடுத்துள்ளனர்.

அதற்கு முந்திய ஆண்டு அது 4.35 விழுக்காடு மட்டுமே.

ஊழியர்கள் அதிகரிக்கப்படாமல் போனால் வரும் நாள்களில் புகார்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வு கூறியது.

குறிப்புச் சொற்கள்