ஏமனிலிருந்து ஏவுகணை பாய்ச்சப்பட்டதால் மத்திய இஸ்ரேலில் அபாய ஒலி

1 mins read
b1e9f2c1-7b0a-4aff-8669-0fc0538025a9
இஸ்ரேலிய ராணுவத்துக்குச் சொந்தமான Black Hawk ஹெலிகாப்டர் ஒன்று டெல் அவிவ் நகரிலிருந்து புறப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: ஏமனிலிருந்து மத்திய இஸ்ரேல் மீது பாய்ச்சப்பட்ட ஏவுகணை ஒன்று, மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாக இஸ்ரேலின் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தது. இதில் யாருக்கும் காயமில்லை.

முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலும் மத்திய இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

“மத்திய இஸ்ரேலில் சற்று முன்னர் அபாய ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணை ஒன்று மத்திய இஸ்ரேலில் திறந்தவெளியில் விழுந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை,” என்று ராணுவம் கூறியது.

குறிப்புச் சொற்கள்