துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் காணாமல்போன 35 வயது இந்திய ஆடவரின் கடப்பிதழும் உடைமைகளும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) காலை மீட்டெடுக்கப்பட்டன.
அந்த ஆடவர் தங்கியிருந்ததாக நம்பப்படும் ஹோட்டலின் இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் அப்புறப்படுத்தியபோது அவரது உடைமைகள் கண்டெடுக்கப்பட்டன.
எனினும், அந்த ஆடவர் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார், துருக்கியின் கிழக்குப் பகுதியின் மலாட்யாவில் உள்ள நான்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த குமாரை தேடி மீட்கும் பணி நடைபெற்று வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உலுக்கியபோது, அந்த 24 மாடி ஹோட்டலின் இரண்டாவது மாடி அறையில் குமார் உறங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.


