கோல்கத்தா: நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கவும் பாஜக அரசியல் பேரணியில் உரையாற்றவும் சனிக்கிழமை (டிசம்பர் 20) மேற்கு வங்கம் சென்றிருந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
தலைநகர் கோல்கத்தாவிலிருந்து நதியா மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் அவர் பயணித்தார். அங்கு தாஹேர்பூரில் மேற்கு வங்க நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கவிருந்தார்.
ஆனால் கடும்பனி காரணமாக விமானிகளுக்கு காட்சி தெளிவின்மை ஏற்பட்டது. ஹெலிகாப்டர் அப்பகுதியை பலமுறை வலம் வந்தும் பயனில்லை. தரையிறங்க முடியாமல் இறுதியாக பிரதமர் கோல்கத்தாவுக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சாலைவழியாக பிரதமர் மோடி தாஹேர்பூருக்குச் செல்வாரா அல்லது வானிலை சற்று வழக்கமானதும் மீண்டும் வான்வழியே அங்கு செல்வாரா என்பது உறுதியாகவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

