கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய காவல்துறை தலைவராக முகமது காலிட் இஸ்மைல் பதவி ஏற்றுள்ளார்.
ஈராண்டு கால தவணையாக அவர் பதவி ஏற்றுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் இஸ்மைல் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக இரண்டு ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்த ரஸாருடின் ஹுசேன், அந்தப் பதவியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 20) விலகுகினார்.
காவல்துறை ஆணையத்தின் பரிந்துரைக்கும் பிரதமரின் ஆலோசனைக்கும் இணங்கும் விதமாக மலேசிய மாமன்னர் வழங்கிய ஒப்புதலின்பேரில் அந்தப் பதவி நியமனம் செய்யப்பட்டதாக திரு சைஃபுதின் கூறினார்.
மலேசிய காவல்துறையை வழிநடத்ததும் பொறுப்புக்குத் தேவைப்படும் செயல்திறனும் தலைமைத்துவப் பண்புகளும் முகமது காலிட்டிடம் இருப்பதாக திரு சைஃபுதின் கூறினார்.
1987 லிருந்து காவல் துறையில் பணியாற்றத் தொடங்கிய முகமது காலிட், புலனாய்வுப் பிரிவின் துணைத் தலைவர், பாதுகாப்பு தொடர்பு அதிகாரி எனப் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார்.
புதிய பொறுப்புக்கு முன்னதாக 60 வயது முகமது காலிட், சிறப்புப் பிரிவின் இயக்குநராகச் செயல்பட்டுள்ளார்.

