அதிர்‌ஷ்டக் குலுக்கலில் 1 மில்லியன் ரிங்கிட் வென்ற துறவி

அதிர்‌ஷ்டக் குலுக்கலில் 1 மில்லியன் ரிங்கிட் வென்ற துறவி

1 mins read
ce0c5543-185f-413b-bbad-eae1faf85559
சான் சாய் சியாங் என்னும் 73 வயது புத்த பிக்குக்கு பிஎஸ்என் (BSN) வங்கி நடத்திய அதிர்‌ஷ்டக் குலுக்கலில் வெற்றிபெற்றார். - படம்: த ஸ்டார்

ஜார்ஜ் டவுன்: பினாங்கில் வசிக்கும் 73 வயது புத்த பிக்குக்கு 1 மில்லியன் ரிங்கிட் (311,947 வெள்ளி), அதிர்‌ஷ்டக் குலுக்கல் மூலம் கிடைத்துள்ளது.

சான் சாய் சியாங் என்னும் புத்த பிக்கு பிஎஸ்என் (BSN) வங்கி நடத்திய அதிர்‌ஷ்ட குலுக்கலில் வெற்றிபெற்றார்.

வங்கி ஊழியர்கள் சியாங்கை அழைத்து விவரத்தைக் கூறிய போது அது ஒரு மோசடி என்று நினைத்தார் அவர்.

இருப்பினும் மூன்று முறை தொடர்ந்து அழைத்ததால் நேரில் சென்றார் திரு சியாங். அதன் பின்னர் தான் அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட் கிடைத்ததை உறுதிசெய்தார்.

சியாங்குடன் பிறந்த 8 உடன்பிறப்புகளில் மூவர் மட்டுமே உயிருடன் உள்ளதாகவும் தாம் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சமய வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கிட்டத்தட்ட 2,500 ரிங்கிட் மட்டுமே தம்மால் சேமிக்க முடிந்ததாகக் கூறிய சியாங், கிடைத்த பணத்தைக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவ உள்ளதாகத் தெரிவித்தார்.

தமது 40 வயதுகளில் துறவியாக மாறிய சியாங் சிங்கப்பூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்