தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிக்டாக்கை முழுமையாகத் தடை செய்த அமெரிக்க மாநிலம்

1 mins read
e21ca830-270d-4c9e-82f7-efe1d64493bf
படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவின் மொன்டானா மாநிலம் சமூக ஊடகச் செயலியான டிக்டாக்கை முழுமையாகத் தடை செய்வதாக அறிவித்துள்ளது

டிக்டாக்கைத் தடை செய்துள்ள முதல் அமெரிக்க மாநிலமும் அதுதான்.

மொன்டானா மாநில ஆளுநர் கிரேக் ஜியான்போர்டே புதன்கிழமை (மே 17) அன்று செயலிக்கான தடை குறித்து அறிவித்தார்.

மாநில மக்களின் நலன் கருதி இதை செய்வதாக கிரேக் கூறினார்.

தடை 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

சீன நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக், மக்களை வேவுபார்க்க செயலியைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்தப் புதிய தடை டிக்டாக்கிற்குச் சிக்கல்களை அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே பிரிட்டன், நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் அதன் அரசாங்க ஊழியர்கள் அரசாங்க சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளன.

அண்மையில் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி அமெரிக்க நீதிமன்றத்தில் செயலியின் பாதுகாப்பு குறித்து கடுமையாக விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்