தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்று மாசுபாடு காரணமாக நாளுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பு

2 mins read
d7c7ee42-cad5-4c8e-849a-cdffb938cca7
காற்று மாசுபாடு காரணமாகப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தாய்லாந்தில் உள்ள பாலர் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிகின்றனர். - படம்: இபிஏ

கிழக்கு ஆசியாவிலும் பசிபிக் நாடுகளிலும் காற்று மாசுபாடு காரணமாக நாளுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை அது வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) வெளியிட்டது.

காற்றின் தரத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று அது அழைப்பு விடுத்துள்ளது.

யுனிசெஃப் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி கிழக்கு ஆசியாவிலும் பசிபிக் நாடுகளிலும் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 40,000 சிறுவர்கள் உயிரிழப்பதாகத் தெரியவந்துள்ளது.

அவர்கள் ஐந்து வயதுக்கும் குறைந்தவர்கள்.

கிழக்கு ஆசியாவிலும் பசிபிக் நாடுகளிலும் கடும் காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்ட இடங்களில் 500 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

வீட்டிலும் வீட்டிற்கு வெளியிலும் நச்சுத்தன்மைமிக்க காற்றை அவர்கள் சுவாசிப்பதாக யுனிசெஃப் கவலை தெரிவித்தது.

அவர்கள் பிறப்பதற்கு முன்பு தாயின் வயிற்றில் இருக்கும்போதே இந்தப் பாதிப்பு அவர்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் வாழ்நாள் முழுதும் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

வீடுகளில் காற்று மாசடைதல் மிகவும் அபாயகரமானது என்று குறிப்பிட்ட யுனிசெஃப் அப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக சமையலுக்கும் வெப்பமூட்டிக்கும் பயன்படுத்தப்படும் எரிபொருள் இருப்பதாக என்று கூறியது.

ஆனால் இந்த நெருக்கடிநிலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என்று அது தெரிவித்தது.

காற்று மாசுபாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அறிக்கை ஒன்றை அது வெளியிட்டுள்ளது.

அதற்கு ‘குரோயிங் அப் இன் தி ஹேஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

“காற்று மாசுபாடு எவ்வித சத்தமின்றி அபாயம் விளைவிக்கக்கூடியது. ஆனால் அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி எதிர்நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது,” என்று யுனிசெஃப்பின் வட்டாரப் பருவநிலை மற்றும் நீடித்த நிலைத்தன்மைமிக்க சுற்றுப்புற ஆலோசகரான திரு சேமுவல் டரெக்கிலௌன் தெரிவித்தார்.

காற்று மாசுபாடு காரணமாக தாய்லாந்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

அந்நாட்டின் விவசாயிகள் பயிர்களுக்குத் தீவைத்து எரிப்பது இதற்கு முக்கிய காரணம்.

குறிப்புச் சொற்கள்