தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவைச் சென்றடைந்த ரோஹிங்யா அகதிகள்

1 mins read
9bb3f4f9-d932-4bf0-b6f8-f49e09bab6ed
சனிக்கிழமையன்று அச்சே மாநிலத்தில் உள்ள சபாங் தீவைச் சென்றடைந்த ரோஹிங்யா அகதிகள். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தை டிசம்பர் 2ஆம் தேதியன்று அடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உள்ளூர்வாசிகள் அவர்களை மீண்டும் கடலுக்குத் திருப்பிவிட மிரட்டிவருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் 1000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் அச்சே மாநிலத்தைச் சென்றடைந்தனர். 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தோனீசியாவுக்குச் சென்றிருக்கும் அகதிகளின் எண்ணிக்கையில் அதுவே ஆக அதிகமானது என்று அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உயர் ஆணையம் கூறியது.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ரோஹிங்யா அகதிகள் கும்பல், மியன்மாரில் கடுமையாக நடத்தப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் தங்கள் உயிர்களைப் பணையம் வைத்து நீண்ட, செலவுகள் மிகுந்த கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியா அல்லது இந்தோனீசியாவுக்குத் தப்பிக்க முயற்சி மேற்கொள்கின்றனர்.

மொத்தம் 139 ரோஹிங்யா அகதிகள் ஏற்கெனவே ‘இ மியூலீ’ கிராமத்தின் கடற்கரையில் இருந்தததாக அதன் தலைவர் டொஃபா ஃபட்லி கூறினார்.

கடந்த நவம்பர் 14ஆம் தேதியிலிருந்து ஆறு படகுகளுக்கும் அதிகமானவை அச்சே மாநிலத்தைச் சென்றுசேர்ந்ததாகவும் மேலும் அதிகமான படகுகள் அங்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆக அண்மையில் வந்திறங்கிய அகதிகள் இடம் மாற்றப்படவில்லை என்றால் அவர்கள் மீண்டும் கடலுக்குத் திருப்பிவிடப்படுவர் என்று திரு ஃபட்லி கூறினார். இதற்கிடையே, அவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்