கனடாவின் டொராண்டோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் தங்கம் உட்பட 20 மில்லியின் வெள்ளி மதிப்புள்ள விலை உயர்ந்த பொருள்கள் திருடப்பட்டுள்ளன.
திருட்டுச் சம்பவம் ஏப்ரல் 17ஆம் தேதி நடந்ததாகவும் அது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒன்டாரியோவில் உள்ள தங்கச் சுரங்கங்களில் எடுக்கப்படும் தங்கம் டொராண்டோ விமான நிலையத்தின் வழி மற்றப் பகுதிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
தங்கம் விமான நிலைய கிடங்கில் ஒரு கொள்கலனில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டிருந்தது. அது அங்கிருந்தபோது திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கனடாவின் வரலாற்றில் இது ஒரு மாபெரும் திருட்டுச் சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் 2011, 2012ஆம் ஆண்டுகளில் 3,000 டன் மேப்பல் சிரப் கியூபக்கில் உள்ள கிடங்கில் இருந்து திருடப்பட்டது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 18 மில்லியன் வெள்ளி.