தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங்கடலைக் காக்க 20க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டணி

1 mins read
8278e3a7-5746-40d7-be69-664fe40cf13e
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து செங்கடல் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க 20க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்க தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து செங்கடல் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க 20க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்க தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் பென்டகன் அலுவலகம் டிசம்பர் 21ஆம் தேதி அன்று கூறியது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள், காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், முக்கியமான கப்பல் பாதையில் உள்ள கப்பல்களைப் பலமுறை குறிவைத்துள்ளனர். இஸ்ரேல் போராளிக் குழுவான ஹமாஸுடன் தற்போது போரிட்டு வருகிறது.

இன்றளவில், 20 க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டணியில் பங்கேற்கின்றன என்று மேஜர் பெட் ரைடர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹவுதிகள் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பொருளாதார நலனையும் செழிப்பையும் தாக்குகின்றனர். மேலும், அனைத்துலக கடல் பாதையின் கடல் கொள்ளையர்களாகி விட்டார்கள்.

கூட்டணிப் படைகள் செங்கடலுக்கும் ஏடன் வளைகுடாவுக்கும் இப்பாதையில் பயணம் செய்யும் வணிக கப்பல்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்