மலேசிய மனநல உதவிச் சேவைக்கு 230,000க்கும் மேலான அழைப்புகள்

மலேசிய மனநல உதவிச் சேவைக்கு 230,000க்கும் மேலான அழைப்புகள்

1 mins read
மலேசிய சுகாதார அமைச்சு தகவல்
9af744b1-c7df-4b24-9333-6ac399512188
மலேசியாவின் மனநல உதவிச் சேவையான ‘தலியான் ஹீல் 15555’ நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. - மாதிரிப்படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: மலேசியாவின் மனநல உதவிச் சேவையான ‘தலியான் ஹீல் 15555’ தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 230,151 அழைப்புகள் வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த உதவிச் சேவை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

இவ்வாண்டு ஜூன் 13ஆம் தேதி நிலவரப்படி, அந்த உதவிச் சேவைக்குக் கிட்டத்தட்ட 66,442 அழைப்புகள் கிடைத்ததாக அமைச்சு கூறியது. அது, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட 163,709 அழைப்புகளுடன் ஒப்பிடுகையில் 40% அதிகம் என்று அமைச்சு தெரிவித்தது.

அந்த உதவிச் சேவைக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு நிலையாக உயர்ந்து வருவதாக அது கூறியது.

2023ஆம் ஆண்டில் 27,738ஆக இருந்த அந்த எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டில் 42,990ஆகவும், பின்னர் 2025ஆம் ஆண்டில் இரட்டிப்பாகி 90,981ஆகவும் உயர்ந்ததாக அது தெரிவித்தது.

“தொலைபேசிவழி ஆலோசனைச் சேவைகளைப் பெறுவதற்கு அதிகமானோர் இப்போது முன்வரத் தொடங்கியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது,” என்று அமைச்சு புதன்கிழமை (ஜூலை 8) நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் கூறியது.

மனச்சோர்வு, தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் எண்ணங்களால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உணர்வுசார்ந்த, உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதில், அந்த உதவிச் சேவை எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அசிசா வான் இஸ்மாயில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்தபோது, அமைச்சு அந்தத் தகவல்களைத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
உதவிஅழைப்புமலேசியா