இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குவெட்டா நகரில், பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஞாயிற்றுக்கிழமையன்று (மே 24) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 30க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (மே 25) தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினரும் அவர்கள் குடும்பத்தினரும் சென்றுகொண்டிருந்த ரயில் மீது வெடிகுண்டு பொருத்தப்பட்ட கார் மோதியது.
மாண்டோர் குறித்த அதிகாரபூர்வ எண்ணிக்கையைப் பாகிஸ்தானிய அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.
தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் எனும் போராளி அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
அதை ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று அது வகைப்படுத்தியது.

