தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிக ஜப்பானியர்களுக்குபாலியல் உறவில் திருப்தியில்லை

1 mins read
be6dae37-d71d-440f-8975-b31c9c91efe7
ஜப்பானியர்களுக்கு அடுத்ததாக தென்கொரியர்களில் குறைவானோர் பாலியல் உறவில் திருப்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானியர்கள் தங்களின் பாலியல் உறவு மற்றும் காதல் உணர்வில் மிகக் குறைவான திருப்தியுடன் இருக்கிறார்கள். இதற்கு அடுத்ததாக தென் கொரியர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு பிரெஞ்சு நிறுவனத்தின் உலகளாவிய ஆய்வு தெரிவிக்கிறது.

இரண்டு ஆசிய நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

பாரிஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘இப்சோஸ்’ (Ipsos), 31 நாடுகளில் அந்த ஆய்வை நடத்தியிருக்கிறது.

இதில் பதிலளித்த ஜப்பானியர்களில் 37 விழுக்காட்டினர் மட்டுமே பாலியல் மற்றும் காதல் உணர்வில் திருப்தி அடைவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கு மாறாக 76 விழுக்காடு இந்தியர்கள், மெக்சிகோ நாட்டவர்கள் பாலியல் உறவு மற்றும் காதல் உணர்வில் திருப்தி அடைவதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்