மேலும் பல முக்கியப் பிரமுகர்கள் அம்னோவில் மீண்டும் இணையலாம்: ஸாஹித்

மேலும் பல முக்கியப் பிரமுகர்கள் அம்னோவில் மீண்டும் இணையலாம்: ஸாஹித்

2 mins read
32b96736-c966-4c88-8272-a5ac834c6171
அம்னோ தலைவர் டாக்டர் அஹமது ஸாஹித் ஹமிடி (வலது). - படம்: பெர்னாமா

ஷா ஆலம்: ‘காகாசான் ரூமா பங்சா’ முன்னெடுப்பின் மூலம், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மேலும் பல முக்கியப் பிரமுகர்கள் அம்னோவில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் இளையர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன், அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் ஹிஷாமுதீன் ஹுசைன், முன்னாள் வெளியுறவு அமைச்சர் சையது ஹமீத் அல்பார் ஆகியோரின் நிபந்தனையற்ற திரும்புதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்னோ அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

புதிய விண்ணப்பங்கள் உட்பட, இதுவரை மொத்தம் 6,252 பேர் அம்னோவில் மீண்டும் இணைவதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும், இது ஒரு கணிசமான நல்ல முன்னேற்றம் என்றும் அம்னோ தலைவர் டாக்டர் அஹமது ஸாஹித் ஹமிடி கூறினார்.

“அதிகமானோரைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், கௌரவத்தைக் காக்க நான் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடத் தேவையில்லை. நாங்கள் அனைவரையும் நிபந்தனையின்றி வரவேற்கிறோம். அவர்கள் தாங்கள் பங்கேற்பதற்கான விருப்பத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் மட்டும் எழுதி அனுப்புவதன் மூலம் இந்த விண்ணப்பத்தை எளிதாக்கினோம். நாங்கள் உடனடியாக முடிவும் தெரிவித்து விடுவோம்,’’ என்றார் அவர். ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 19) ஷா ஆலமில் ரிஸ்மார்ட் க்ரோசர் பேரங்காடியைத் திறந்து வைத்த பிறகு துணைப் பிரதமருமான டாக்டர் அஹமது ஸாஹித் இவ்வாறு கூறினார். அந்த விண்ணப்பத்தை இனி ரூமா பங்சா குழுவிற்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை என்றும் அதற்குப் பதிலாக ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் உதவித் தலைவர் காலிட் நோர்டின் தலைமையிலான குழுவிடம் வழங்க அம்னோ உச்சமன்றம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

பெர்சத்து மலேசியா கட்சி உட்பட, தற்போது மற்ற கட்சிகளில் உள்ள பல முன்னாள் அம்னோ உறுப்பினர்கள், மீண்டும் கட்சிக்குத் திரும்புவதில் ஆர்வம் தெரிவிப்பதற்காக தன்னை முறைசாரா முறையில் சந்தித்ததாக டாக்டர் ஸாந்த் மேலும் கூறினார்.

இருப்பினும், அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, அவர்களின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.

“எந்த நிபந்தனைகளும் இன்றி, ரூமா பங்சா வழியாக அம்னோவில் சேர அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்