தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவர் பற்றாக்குறையால் அதிகமான விலங்குகளுக்கு இணைய மருத்துவப் பரிசோதனை

2 mins read
20ecf88b-68ff-419e-8d0f-39ca3fef9391
ஹொக்கைடோவின் எபெட்சு நகரில், இணையம் வழி கால்நடை மருத்துவரிடம் தனது பசுவுக்கு சிகிச்சை பெறும் பண்ணை உரிமையாளர் நோரிஹிகோ கோபயாஷி. - படம்: யோமியூரி ஷிம்பன் / ஏஷியா செய்தி கட்டமைப்பு

சப்போரோ: ஜப்பானில் கால்நடைகளுக்கு இணைய மருத்துவப் பரிசோதனை குறிப்பாக ஹொக்கைடோவில் வழக்கமானதொன்றாகி வருகிறது.

கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை இதற்கு ஒரு காரணம்.

தொலைதூரத் தீவுகள், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் விலங்குகளுக்கு மருத்துவ உதவி பெறுவதில் இணையப் பரிசோதனையை நாட வேளாண், வனத்துறை, மீன்வளத்துறை அமைச்சு ஊக்குவித்து வருகிறது.

தோக்கியோவை தளமாகக்கொண்ட எஸ்பி தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த இணையக் கட்டமைப்பில், விலங்கு பண்ணையாளர்கள் தங்கள் திறன்பேசி அல்லது டேப்லெட் வழியாக கால்நடை மருத்துவரிடம் பேசலாம். மருத்துவப் பதிவுகள் கிளவுட் சேமிப்பகங்களில் சேமிக்கப்படுகின்றன. பரிசோதனைக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஹொக்கைடோவில் உள்ள 71 கால்நடை மருந்தகங்கள் இந்த இணையச் சேவையைப் பயன்படுத்துகின்றன என்று நோசை ஹொக்கைடோ வேளாண் பரஸ்பர உதவிச் சங்கம் தெரிவித்தது.

பரிசோதனை நேரத்தையும் செலவையும் குறைக்க இணையச் சேவை உதவும் என்று வேளாண் அமைச்சு நம்புகிறது.

கால்நடை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதும், பண்ணையாளர்கள் உடனடியாக மருத்துகளை விலங்குகளுக்கு வழங்க வசதியாக, தேவையான மருந்துகளை முன்கூட்டியே விநியோகிக்க, மருத்துவப் பதிவுகளின் அடிப்படையில் ஒரு கட்டமைப்பை உருவாக்க நோசை ஹொக்கைடோ திட்டமிடுகிறது.

அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2022ல் கால்நடை உரிமங்களை வைத்திருந்த 40,455 பேரில், கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் செல்லப்பிராணிகளுக்கான விலங்கு மருத்துவமனைகளில் பணியாற்றினர். 4,460 கால்நடை மருத்துவர்கள் மட்டுமே பண்ணை விலங்குகளுடன் பணியாற்றினர். பெரிய விலங்குகளுக்கான மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.

நோசாய் சங்கங்கள், உறுப்பினர்களுக்குச் சொந்தமான கால்நடைகளுக்கான மருத்துவச் செலவுகளை உள்ளடக்கும் பரஸ்பர உதவித் திட்டங்களை வழங்குகின்றன. இணைய பரிசோதனைகளை ஊக்குவிக்க, இணையப் பரிசோதனைகளையும் இந்த உதவித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்