தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அரிசோனா, மிஸிஸிப்பி மாநிலங்களின் வர்த்தக ஈர்ப்பு

அமெரிக்காவில் வாய்ப்புகளைத் தேடும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
12fc86ff-af10-4611-939d-79709632f91e
மிஸ்சிசிப்பி மாநிலத்தில் ஈஸ்ட் விங்கோ சாலையில் உள்ள மேப்பல்ட்டிரீ நிறுவனத்தின் தொழில்கூடம். - படம்:மேப்பல்ட்டிரீ

ஃபீனிக்ஸ்/அரிசோனா: அரிசோனா மாநிலத்தில் பெருவளர்ச்சியடைந்து வரும் பகுதிமின்கடத்தி மையம், மிஸிஸிப்பி மாநிலத்தில் வர்த்தகம் செய்வதன் எளிமை ஆகியன உலகளாவிய நிறுவனங்கள் அமெரிக்காவில் கால்பதிக்க முக்கிய காரணங்கள் என்று என்டர்பிரைஸ் எஸ்ஜி தெரிவித்துள்ளது.

கள்ளிச் செடிகள் படர்ந்து, பாறைகள் தொடுவானை அலங்கரிக்கும் அரிசோனா மாநிலம் சிங்கப்பூர் நிறுவனங்கள் நிலைபெற்றிருக்கும் ஓரிடமாகும். அங்கு திரண்டுள்ள மணலைப்போன்று தொழில்நுட்பத் துறையில் பல வாய்ப்புகள் உள்ளன.

50 வருட அனுபவம் நிறைந்த பிஹெச்எஸ் கினெடிக் எனும் சிங்கப்பூர் நிறுவனம், கடந்த 2022ஆம் ஆண்டில் அரிசோனா மாநிலத்தில் வர்த்தக வாய்பை நாடி விரிவாக்கம் கண்டது. தற்பொழுது, அது ஸ்கைசோங் என்ற அரிசோனா மாநில பல்கலைக்கழக ஸ்காட்ஸ்டேல் புத்தாக்க மையத்தில் அடித்தளம் அமைத்துள்ளது. அந்த மையம், புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கும் வளர்ச்சியடைவதற்கும் உதவுகிறது.

“பகுதிமின்கடத்தி உற்பத்தியில் அமெரிக்கா பெரும் மூலதனம் செய்கிறது. அதற்கான முக்கிய மையமாக அரிசோனா அமைகிறது. வாடிக்கையாளர்களுடன் அணுக்கமாகச் செயல்படுவது முக்கியம். அரிசோனா அத்தகைய சூழலை ஏற்படுத்தித் திறனாளர்களையும் வழங்குகிறது” என்று பிஹெச்எஸ் நிறுவனத்தின் வட அமெரிக்கப் பொது மேலாளர் டேவ் டான் கூறினார். அமெரிக்காவில் அந்த நிறுவனம், மேம்பட்ட பகுதிமின்கடத்தி உபகரணங்களை நிறுவி, அவற்றை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது.

அரிசோனாவை மையமாகக் கொண்டு, பல மாநிலங்களில் அந்த நிறுவனம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அமெரிக்கா குறிப்பிடத்தக்க வகையில் வாய்ப்புகளை வழங்குவதாக அரசாங்க அமைப்பான என்டர்பிரைஸ்எஸ்ஜி விளக்கியது. உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்குக்கும் அதிக அளவில் உள்ள விகிதத்தை பிரதிநிதிக்கும் அமெரிக்கா உலகின் ஆகப் பெரிய பொருளாதாரமாகவும் விளங்குகிறது.

பாரம்பரியத் துறைகளான தளவாடப் போக்குவரத்து, நிலச் சொத்துப் பரிவர்த்தனை, நிபுணத்துவ சேவை, பயனீட்டாளர் சார்ந்த விற்பனை போன்ற வர்த்தகங்களின் தேவை அதிக அளவில் உள்ளதாக என்டர்பிரைஸ் எஸ்ஜியின் அமெரிக்காஸ் வட்டார இயக்குநரான லிம் சியாவ் ஹுய் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்