அலோர் ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் பத்து வயது சிறுவன் ஒருவன் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் பயணம் செய்த அவனது 7 வயது சகோதரன் மாண்டான்.
மொத்தம் மூன்று சிறுவர்கள் அந்த மோட்டார்சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து கெடாவின் பாலிங் நகரில் அக்டோபர் 17ஆம் தேதியன்று நடைபெற்றது.
மற்ற இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்ததாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.
அந்த ஏழு வயது சிறுவனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் கெடா காவல்துறை தெரிவித்தது.
விபத்துக்குள்ளான வேனின் 26 வயது ஓட்டுநரின் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன.
வேனில் பயணம் செய்த இருவர் காயமின்றி தப்பினர்.