விபத்தில் சிக்கியவருக்கு உதவச் சென்றவர் விபத்துக்குள்ளாகி மாண்டார்

விபத்தில் சிக்கியவருக்கு உதவச் சென்றவர் விபத்துக்குள்ளாகி மாண்டார்

1 mins read
87cf4744-f47e-456e-88cf-846f3f47b207
உதவச் சென்ற 35 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். - படங்கள்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாலையில் சென்றுகொண்டிருந்த 35 வயது கார் ஓட்டுநர், எதிர்த்தடத்தில் விபத்து நேர்ந்திருந்ததைக் காண்டார்.

விபத்தில் சிக்கியவருக்கு உதவச் சென்றார்.

ஆனால், உதவச் சென்றவர் மீது டிரக் ஒன்று மோதியதை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

விபத்தில் சிக்கிய மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் மலேசியாவின் சுங்கை ரெங்கிட்-ஜாலான் கோத்தா திங்கி பகுதியில் ஜூன் 6ஆம் தேதி பகலில் நடந்தது.

மஞ்சள்நிற கார் ஒன்றில் சிக்கியிருந்த 33 வயது ஓட்டுநருக்கு உதவுவதற்காக அந்த நல்லுள்ளம் படைத்த ஓட்டுநர் முயன்றதாக ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தது.

ஆனால், அவர் உதவிய வேளையில் டிரக் அவர் மீது மோதியது.

கடுமையான உள்காயங்கள் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்