நவீன வகை துப்பாக்கியுடன் வடகொரியத் தலைவரின் மகள்

நவீன வகை துப்பாக்கியுடன் வடகொரியத் தலைவரின் மகள்

படம்: இபிஏ

28 Feb 2026 - 5:53 pm

1 mins read

பியோங்யாங்: வடகொரியாவின் ஒன்பதாவது கட்சி மாநாட்டின் நிறைவாக, தலைவர் கிம் ஜோங் உன் தமது கட்சியினர்க்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் நவீன ‘ஸ்னைப்பர்’ வகை துப்பாக்கிகளைப் பரிசாக வழங்கி, அவர்கள்மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 

இவ்விழாவில், அவரது மகள் கிம் ஜூ ஏ துப்பாக்கி ஏந்தி இலக்கைச் சுடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.  இது அவர் நாட்டின் நான்காம் தலைமுறைத் தலைவராக உருவெடுப்பதற்கான அதிகாரத்துவப் பயிற்சியைப் பெறுவதைச் சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அவ்விழாவில், திரு கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் கட்சியின் பொது விவகாரத் துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளதும் உறுதிசெய்யப்பட்டது.

திரு கிம்மின் மகளான ஜூ ஏ, தற்போது வடகொரியாவின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்காற்றும் இரண்டாம் நிலைத் தலைவராகத் திகழ்வதாகத் தென்கொரிய உளவு அமைப்பு கருதுகிறது.

குறிப்புச் சொற்கள்