தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முவான் விமான நிலையம் மேலும் ஒரு வாரத்திற்கு மூடல்

1 mins read
1e60ec2f-2b54-42be-91aa-bc2c48ec3159
ஜனவரி 7ஆம் தேதி முவான் விமான நிலையம் திறக்கப்படவிருந்தது. - படம்: ஏஎஃப்பி

சோல்: முவான் அனைத்துலக விமான நிலையம், ஜனவரி 14 வரை மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டிருக்கும் என தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 டிசம்பர் 29ஆம் தேதி ஜேஜு ஏர் விமானம் விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த 179 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனவரி 7ஆம் தேதி முவான் விமான நிலையம் திறக்கப்படவிருந்தது. ஆனால், தற்போது நடைபெற்றுவரும் விசாரணையைச் சுட்டி, அது இன்னும் ஒரு வாரத்திற்கும் மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் திங்கட்கிழமை (ஜனவரி 6) கூறியது.

தென்கொரியாவின் இந்த ஆக மோசமான விமான விபத்து தொடர்பில் அமைக்கப்பட்ட கூட்டு விசாரணைக் குழு, அதன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு தென்கொரிய விசாரணை அதிகாரிகள், அமெரிக்க தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழுவுடன் சேர்ந்து விமானத் தரவுப் பதிவுப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு பகுப்பாய்வுக்காக திங்கட்கிழமை அமெரிக்காவுக்குப் புறப்படவிருந்தனர்.

விமானி அறையின் குரல் பதிவுகளோடு சேர்த்து, விபத்து குறித்த முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்கும் இரு கறுப்புப் பெட்டிகள் அவை.

குறிப்புச் சொற்கள்