தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூசோஃப் ராவுத்தர் தீர்ப்பு: அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் மேல்முறையீடு

1 mins read
cc953380-a51c-4c49-a43a-5d4e86ce16d9
முகம்மது யூசோஃப் ராவுத்தர் (நடுவில்). - படம்: இணையம்

கோலாலம்பூர்: போதைப்பொருள் கடத்தல், மாதிரி துப்பாக்கிகளை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து முகம்மது யூசோஃப் ராவுத்தர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மலேசிய தலைமைச் சட்ட அலுவலகம் மேல்முறையீடு செய்யவிருக்கிறது என்று மலாய் மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது.

மலேசிய உயர்நீதிமன்றம், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் உதவியாளரான யூசோஃபைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்ததைத் தொடர்ந்து அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் மேல்முறையீடு செய்யவிருக்கிறது.

வாகனத்தில் 305 கிராம் எடைகொண்ட கஞ்சாவைக் கடத்தியதாக யுசோஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த வாகனம், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி காலை 10.15 மணியளவில் கோலாலம்பூர் காவல்துறைத் தலைமையகத்துக்கு வெளியே இருந்தது.

மலேசியாவின் அபாயகரமான போதைப்பொருள்கள் சட்டம் 1952, சட்டப் பிரிவு 39B(1)(a)இன் படியாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை அல்லது 30லிருந்து 40 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

அதே நாளில் ஜாலான் புக்கிட் கியாராவில் உள்ள கொண்டோமினியத்துக்கு அருகே இரண்டு மாதிரி துப்பாக்கிகளை வைத்திருந்ததாக யூசோஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆயுதங்கள் சட்டம் 1969 சட்டப் பிரிவு 36(1)இன்கீழ் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை அல்லது 5,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்