தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவிட்சர்லாந்து ஏரிகளை ஆக்கிரமித்துள்ள கடல் சிப்பிகள்

1 mins read
de8a8152-330d-409b-852a-cd0c06626582
மீன் பிடிக்க விரிக்கப்பட்ட வலைகளில் அவை ஒட்டிக்கொண்டிருப்பதாக மீனவர்கள் குறைகூறினர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெர்ன்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஏரிகளை சிப்பி வகையான கடல் மட்டிகள் (mussels) ஆக்கிரமித்துள்ளன.

பாதிக்கப்பட்ட ஏரிகளில் நியூசாட்டெல் ஏரியும் அடங்கும்.

மீன் பிடிக்க விரிக்கப்பட்ட வலைகளில் அவை ஒட்டிக்கொண்டிருப்பதாக மீனவர்கள் கூறினர்.

இதனால் மீன் பிடிக்க முடியவில்லை என்றும் வலைகளை வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி மாற்ற வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய கடல் மட்டிகளின் எண்ணிக்கை அந்த ஏரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடல் மட்டிகள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் நீருக்கு அடியில் உள்ள குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஏரியில் கண்ணுக்குத் தெரியாத சிறு தாவர வகைகளை கடல் மட்டிகள் பேரளவில் உட்கொள்வதால் அங்கிருக்கும் மற்ற உயிரினங்களுக்கு போதுமான இரை கிடைப்பதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்