கோலாலம்பூர்: மானிய விலையில் வழங்கப்படும் ரோன்95 பெட்ரோலை அதிக அளவில் நிரப்பிய கார் உரிமையாளரின் ‘மை கார்ட்’( MyKad) கணக்கை முடக்கியுள்ளதாக மலேசிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பரவிய காணொளியில், ஒரு தம்பதி ஏறக்குறைய 230 ரிங்கிட் மதிப்புள்ள ரோன்95 பெட்ரோலை நிரப்புவது காணப்பட்டது. இச்சம்பவம் ஜோகூர் ஸ்கூடாயில் உள்ள ஒரு பெட்ரோனாஸ் நிலையத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தம்பதி கொள்கலன்களில் பெட்ரோலை நிரப்பிய பின்னர் காரிலும் நிரப்பியுள்ளனர். இது மானிய விலை பெட்ரோல் முறைகேடு என்பதால் இது சட்டவிரோதமானது என்று அமைச்சு கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் அது தெரிவித்துள்ளது. எந்த விதமான மானியக் கசிவு அல்லது முறைகேட்டிலும் அரசாங்கம் சமரசம் செய்துகொள்ளாது என்று அமைச்சு நினைவூட்டியது.
அதிக அளவில் மானிய விலை பெட்ரோல் நிரப்பியவரின் ‘மை கார்ட்’ முடக்கம்
1 mins read
இது தொடர்பாகப் பரவிய காணொளியில், ஒரு தம்பதி ஏறக்குறைய 230 ரிங்கிட் மதிப்புள்ள ரோன்95 பெட்ரோலை நிரப்புவது காணப்பட்டது. - படம்: தமிழ் மலர்
'My Card' of a person who filled subsidised petrol in large quantities suspended.
The Ministry of Finance froze a car owner's MyKad account after a video surfaced showing a couple filling RM230 worth of subsidized RON95 petrol at a Petronas station in Skudai, Johor. They filled both containers and their car. The Ministry condemned this as an illegal abuse of subsidized fuel and announced intensified enforcement measures. The government stated it will not compromise on any subsidy leakage or abuse.
Generated by AIகுறிப்புச் சொற்கள்

