மியன்மாரில் மக்கள்தொகை கணக்கெடுப்பு

மியன்மாரில் மக்கள்தொகை கணக்கெடுப்பு

1 mins read
69d537ff-42ca-48f9-a658-e42658396140
மியன்மாரில் வெள்ளோட்ட முறையில் 20 நகரங்களில் மக்கள்தொகைக் கணககெடுப்பு தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஆட்சிக்குழு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

யங்கூன்: மியன்மாரில் வெள்ளோட்ட முறையில் 20 நகரங்களில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஆட்சிக்குழு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அந்நாட்டில் நடைபெறும் ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களின் நடவடிக்கையைக் கண்காணிக்க, இந்தக் கணக்கெடுப்பு பயன்படுத்தப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு மக்கள் தலைவரான ஆங் சான் சூச்சியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. மோசடி செய்து அக்கட்சி வெற்றி பெற்றது எனக் கூறி 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்குமுன் இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவுபெறும் என ராணுவ ஆட்சிக்குழு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்மக்கள்தொகைகணக்காய்வு