தாய்லாந்து மாநாட்டில் பங்கேற்க வருகிறார் மியன்மார் ராணுவத் தலைவர்

1 mins read
2a3ceaca-181c-4d0b-96ec-d7837a3767ec
மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலைங்கின் தாய்லாந்து பயணம் மிக அரிதானது என்று சொல்லப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து தலைநகரில் அடுத்த வாரம் நடைபெறும் வட்டார உச்சநிலை மாநாட்டில் மியன்மார் ராணுவத் தலைவர் மிங் ஆங் ஹிலைங் பங்கேற்பார் என்று அது குறித்து நன்கறிந்த மூன்று தகவல்கள் மார்ச் 28ஆம் தேதியன்று உறுதிப்படுத்தியுள்ளன.

பேங்காக் நகரில் ஏப்ரல் 3 முதல் 4 வரை ‘பிம்ஸ்டெக்’ மாநாடு நடைபெறுகிறது.

2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் மியன்மார் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இது, உள்நாட்டுப் போருக்கு வழி வகுத்துள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு மூத்த ஜெனரல் மிங் ஆங் ஹிலைங் மேற்கொள்ளும் பயணம் மிக அரிதானது என்று சொல்லப்படுகிறது.

அவர், மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ஆளானவர். மேலும் ஒப்புக் கொள்ளப்பட்ட அமைதித் திட்டத்தை செயல்படுத்தத் தவறியதற்காக தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பான ஆசியான் கூட்டங்களில் பங்கேற்க அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.

அவரது பயணத்தைப் பற்றி தகவல் வெளியிட்ட அதிகாரிகள் தங்களுடைய அடையாளங்களை வெளியிட மறுத்துவிட்டனர். தாங்கள் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் அல்லர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, மியன்மார் ராணுவ அரசாங்கத்தின் பேச்சாளரை தொடர்புகொண்டபோது உடனடியாக அவருடைய கருத்துகளை அறிய முடியவில்லை. அவரது வரவை தாய்லாந்து வெளியுறவு அமைச்சும் உறுதிப்படுத்தவில்லை.

பிம்ஸ்டெக் அல்லது பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளியல் ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகளின் முயற்சி என்று அழைக்கப்படும் அமைப்பில் தாய்லாந்து, மியன்மார், இந்தியா, பங்ளாதேஷ், நேப்பாளம், இலங்கை, பூட்டான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்