மியன்மாரின் புதிய தலைமைத்துவம் பரிந்துரைகளுக்குச் செவி சாய்க்கிறது: மலேசியா

மியன்மாரின் புதிய தலைமைத்துவம் பரிந்துரைகளுக்குச் செவி சாய்க்கிறது: மலேசியா

1 mins read
0d94072f-9638-4095-8e2f-08e3a42c4031
மியன்மாரின் வெளியுறவு அமைச்சருடன் முக்கிய விவகாரங்கள் பற்றிப் பேசியதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசன் நாடாளுமன்றத்தில் கூறினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மியன்மாரில் புதிதாக அமைந்துள்ள அரசாங்கம், முன்பைவிட இப்போது பரிந்துரைகளுக்குச் செவி சாய்ப்பதைப்போல் தோன்றுவதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசன் வியாழக்கிழமை (ஜூன் 25) கூறியிருக்கிறார்.

மியன்மாரின் வெளியுறவு அமைச்சர் டின் மவுன் ஸ்வேயைச் சென்ற மாதம் நேப்பிடாவில் சந்தித்துப் பேசியதாக மலேசிய நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆசியான் அமைப்பு ஏற்கெனவே முன்வைத்திருந்த ஐந்து அம்சத் திட்டத்தின் நிலவரம் குறித்து அவருடன் விவாதித்ததாகவும் திரு முகம்மது ஹசன் சொன்னார்.

அரசியல் கைதிகளை விடுவித்தல், மியன்மாரிலிருந்து மலேசியாவிற்கு வந்த ரோஹிங்யா அகதிகளைக் கையாள எடுக்கப்படும் முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றியும் பேசியதாக அவர் கூறினார்.

உள்நாட்டுப் போரால் அவதியுறும் அந்நாட்டின் ராணுவ அரசாங்கத்துடன் கலந்துபேசுவதற்கான முயற்சிகளைத் தென்கிழக்காசிய நாடுகள் தொடர்ந்து எடுத்துவருகின்றன. இந்நிலையில், மலேசிய அமைச்சரின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

மியன்மாரில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சி, அபார வெற்றிகண்டது.

ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் அதிபராகப் பொறுப்பேற்று, புதிய அமைச்சரவையை நியமித்தார். அந்நாடு மீண்டும் மக்களாட்சிக்குத் திரும்புவதை உலகிற்குக் காட்டும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும் மேற்கத்திய அரசாங்கத் தரப்பினரும் கவனிப்பாளர்களும் அது ஏமாற்று வேலை என்று குறைகூறினர்.

குறிப்புச் சொற்கள்