மர்மமான பெரிய பந்து அகற்றப்பட்டது

மர்மமான பெரிய பந்து அகற்றப்பட்டது

1 mins read
3ac1c543-3748-489a-9cf0-60b751d6c753
படம்: ராய்ட்டர்ஸ் -

ஜப்பானின் ஹமாமட்‌ஷூ கடற்கரையில் சில நாள்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட உலோகத்திலான ஒரு பெரிய பந்து அகற்றப்பட்டுவிட்டது.

1.5 மீட்டர் விட்டமும் 300 கிலோ எடையும் கொண்ட அந்தப் பந்து அகற்றப்படும் காணொளியை ஜப்பானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

உலோகப் பந்தைச் சில காலம் ஆராய்ந்தபின் அது அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், பந்து தொடர்பாக அதிகாரிகள் எந்தத் தகவலும் வெளியிடாதது குறித்துப் பொதுமக்களில் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

பந்து கடலில் இருந்த ஒரு மிதவை என்றும் அது மனிதர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்தனர்.

பந்து அகற்றப்பட்டுவிட்டதால் சிலர் மகிழ்ச்சி அடைந்தனர்.

முதன்முதலாக கடற்கரையில் அப்பந்தை அடையாளம் கண்டபோது பலரும் அச்சம் தெரிவித்தனர், சிலர் விளையாட்டாக 'காட்ஸிலா பந்து' என்றும் அதனைக் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்