ஜப்பானின் ஹமாமட்ஷூ கடற்கரையில் உலோகத்திலான ஒரு பெரிய உருண்டை பந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உள்ள அந்தப் பந்து உள்ளூர்வாசிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பந்து கிட்டத்தட்ட 1.5 மீட்டர் அகலமாக இருந்தது. அதை இரண்டு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
பந்து தொடர்பாக அதிகாரிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை. அதே நேரம் பந்தை ஆராய காவல்துறையோ பாதுகாப்புப் படையினரோ யாரும் கடற்கரைக்கு வரவில்லை.
பந்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். பந்து கடலில் உள்ள ஒரு மிதவை, அது தற்போது கரை ஒதுங்கியுள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.
சிலர் விளையாட்டாக 'காட்சிலா பந்து' என்று கூறிவருகின்றனர்.

