முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரிமீதான வழக்கு: கைவிடும் நஜிப்

முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரிமீதான வழக்கு: கைவிடும் நஜிப்

1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கை மீண்டும் செயல்படுத்தும் இறுதி முயற்சியைக் கைவிட்டார்
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

26 Nov 2026 - 2:55 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரியான டாமி தாமஸ்மீதான வழக்கைச் செயல்படுத்தும் இறுதி முயற்சியை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைவிட்டுள்ளார்.

1.9 மில்லியன் ரிங்கிட் (596,898 வெள்ளி) மதிப்பிலான அவ்வழக்கைச் செயல்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டதையடுத்து ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த சட்டரீதியான முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.

தாமஸ் நஜிப்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.

மத்திய அரசாங்கத்தின்கீழ் வரும் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்வதற்கான மனுத் தாக்கல் செய்வதற்குத் தான் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை நஜிப் மீட்டுக்கொண்டார். தொடர்ந்து சிக்கலாக இருந்துவரும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த நஜிப் விரும்புவதாக அவரது வழக்கறிஞர் ஃபிரோஸ் ஹுசேன் அகமது ஜமாலுதீன் வியாழக்கிழமை (நவம்பர் 26) நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்று ஃபிரீ மலேசியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டது. மேல்விவரம் ஏதும் வழங்கப்படவில்லை.

நஜிப் 100,000 ரிங்கிட் செலுத்த ஒப்புக்கொண்டதை இருதரப்பு வழக்கறிஞர்களும் உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து மூன்று நீதிபதிளைக் கொண்ட குழு விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது.

நஜிப் நீதிமன்றத்துக்கு நேரில் சென்றார். அவரது குடும்பத்தாரும் ஆதரவாளர்களும் நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கான கூடத்தில் திரண்டனர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாநஜிப் ரசாக்வழக்குநீதிமன்றம்