சோல்: மலிவு விலையில் விமானச் சேவைகளை வழங்கி வரும் T’way Air இனி டிரினிட்டி ஏர்வேஸ் (Trinity Airways) என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.
தென்கொரியாவில் மிகப் பிரபலமான இந்த விமான நிறுவனத்தின் உரிமையாளர் டேமியுங் சோனோ குழுமம் (Daemyung Sono Group) இத்தகவலை வெளியிட்டது.
விமான நிறுவனத்தை இவ்வாண்டு ஜூன் மாதம் சோனோ குழுமம் வாங்கியது.
14 ஆண்டுகளாக விமானச் சேவைகளை வழங்கி வந்த விமான நிறுவனம் தற்போது உலக அளவில் சேவையை வழங்கவுள்ளதால் இந்தப் பெயர் மாற்றம் முக்கியமானது என்று சோனோ குழுமம் தெரிவித்தது.
2026ஆம் ஆண்டின் முதல்பாதியில் விமானத்தின் மீது புதிய பெயர் கொண்ட ஒட்டு வில்லைகள் ஒட்டப்படும்.
டேமியுங் சோனோ குழுமம் ஹோட்டல் மற்றும் உல்லாசத் தளங்களை நடத்தி வருகிறது. அது 18க்கும் மேற்பட்ட ஹோட்டல்களைத் தென்கொரியாவில் நடத்துகிறது. அவற்றில் 11,000க்கும் அதிகமான அறைகள் உள்ளன.
2004ஆம் ஆண்டு ஹங்சுங் ஏர்லைன்ஸ் என்று தொடங்கப்பட்ட விமான நிறுவனம் பின்னர் 2010ஆம் ஆண்டு T’way Air என்று பெயர் மாற்றப்பட்டது. அதன்பின்னர் தற்போது மீண்டும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

