தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாஸ் ஏஞ்சலிசில் தேசிய காவல் படையை ஈடுபடுத்தலாம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

1 mins read
f8b89447-4398-40dd-9484-020c864b1a14
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் சுமார் ஒரு வாரமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. - படம்: ஏஎஃப்பி

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் தற்போதைக்கு தேசிய காவல் படையினரைப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக அமெரிக்க கீழ்நீதிமன்றம் ஒன்று தேசிய காவல் படையினரை ஈடுபடுத்துவதைத் தடை செய்தது. அந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 12) தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது.

‘நைன்த் யுஎஸ் சர்க்கிட் கோர்ட் ஆஃப் அப்பீல்ஸ்’ (9th US Circuit Court of Appeals) எனும் அந்த மேல்முறையீட்டு நீதிமன்றம் இறுதியில் திரு டிரம்ப்பின் நிலையோடு ஒத்துப்போகும் என்று சொல்ல முடியாது. எனினும், தற்போதைக்கு தேசிய காவல் படைக்கு உத்தரவிடும் அதிகாரம் திரு டிரம்ப்புக்கு உள்ளது.

சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறப்படுவோருக்கு எதிராக திரு டிரம்ப்பின் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை எதிர்த்து லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

பெரும்பாலும் லாஸ் ஏஞ்சலிசின் மத்தியப் பகுதியில் உள்ள மத்திய தடுப்புக் காவல் நிலையத்துக்கு அருகே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்துள்ளன. அங்கே தேசிய காவல் படையினர் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்