ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி பற்றி இனவாதக் கருத்து கூறிய வீரருக்கு எதிராக நடவடிக்கை

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி பற்றி இனவாதக் கருத்து கூறிய வீரருக்கு எதிராக நடவடிக்கை

1 mins read
d68651f4-913f-4adb-a084-17914b98262f
படம்: இணையம் -

மலேசியாவின் தேசிய ஹாக்கி வீராங்கனையான ஹனிஸ் நதியா நாட்டை பிரதிநிதித்து விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அண்மையில் மலேசியாவில் நடத்திய இசை நிகழ்ச்சி குறித்து அவர் இனவாதக் கருத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட இனத்தை பற்றி ஹனிஸ் தகாத முறையில் கருத்து தெரிவித்ததாக விசாரணையை மேற்கொண்ட இளையர், விளையாட்டு துறை அமைச்சு தெரிவித்தது. எதிர்வரும் கம்போடியாவில் நடக்கவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஹனிஸ் பங்கெடுக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.