சூரிக்: சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய உணவுத் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே கிட்டத்தட்ட 16,000 பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் வருமானத்தை இன்னும் துரிதமாகப் பெருக்க புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஃபிலிப் நவ்ரட்டில் முயல்வதை முன்னிட்டு ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்த ஊழியரணியில் கிட்டத்தட்ட 6 விழுக்காட்டினர் ஆட்குறைப்பு செய்யப்படுவர் என்று நெஸ்பிரெஸோ காப்பிகளையும் கிட்கேட் சாக்லெட்டுகளையும் தயாரிக்கும் பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.
“உலகம் மாறுகிறது, நெஸ்லே அதைவிட துரிதமாக மாறவேண்டும்,” என்று தலைமை நிர்வாக அதிகாரி நவ்ரட்டில் அறிக்கை வெளியிட்டார். எனவே, அடுத்த ஈராண்டுகளில் ஆட்குறைப்பு செய்யவேண்டிய கடினமான ஆனால் அவசியமான முடிவை எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறோம்,” என்று திரு அவர் கூறினார்.
நிறுவனத்தின் செலவுகளிலிருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் சுவிஸ் ஃபிராங்கை 2027ஆம் ஆண்டுக்குள் மிச்சம்பிடிக்கவும் நெஸ்லே நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. இதற்குமுன் அது 12.5 பில்லியன் ஃபிராங்க் தொகையைச் சேமிக்க இலக்கு வைத்திருந்தது.
மூன்றாம் காலாண்டில் விற்பனை எதிர்பார்த்ததைவிட அதிகமாக வந்ததை அடுத்து நிறுவனம் புதிய இலக்கை நிர்ணயித்தது.
நெஸ்லே நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி லோரண்ட் ஃபிரெய்க்ஸ் ஊழியர் ஒருவருடன் ரகசிய உறவில் இருந்தது அம்பலமானதை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதையடுத்து திரு நவ்ரட்டில் பதவியை ஏற்றார்.