டிரம்ப் வெல்ல நெட்டன்யாகு விருப்பம்

டிரம்ப் வெல்ல நெட்டன்யாகு விருப்பம்

1 mins read
a05ea05c-f6d8-4bd0-93d6-38376ed04eaa
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு திரு டோனல்ட் டிரம்ப் வெல்வதைத் தாம்விரும்புவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் டிரம்ப் அமெரிக்காவை ஆட்சி செய்தபோது இஸ்ரேலுக்கு ஆதரவாக சில கொள்கைகளை அவர் அறிவித்தார். அதனால் இந்த தேர்தலில் டிரம்ப் வெல்ல வேண்டும் என்று நெட்டன்யாகு நினைப்பதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் டிரம்ப் தமது தேர்தல் பிரசாரத்தின் போது இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சில கருத்துக்களை தெரிவித்தார். அதனால் சில குழப்பங்களும் நிலவுகின்றன.

டிரம்ப் தமது ஆட்சி காலத்தில் ஈரான்மீது கடுமையான தடைகளை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் நெட்டன்யாகுவுடனான நட்பில் விரிசல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலியர்கள் பலர் டிரம்ப் அதிபராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்