ஆம்ஸ்டர்டாம் - ஓட்டுநர்களின் கணக்குகளை அவர்களுக்குத் தெரிவிக்காமல் முடக்கியதற்காக முன்னணி வாகன முன்பதிவு நிறுவனமான ஊபருக்கு நெதர்லாந்து அரசாங்கம் 825 மில்லியன் யூரோ ($1.2 பில்லியன்) அபராதம் விதித்துள்ளது.
இம்மாதம் 17ஆம் தேதி விதிக்கப்பட்ட அந்த தீர்ப்பை, டச்சு தரவு பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) உறுதிப்படுத்தினார்.
முற்றிலும் தானியங்கி முறையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனிநபர்கள்மீது எவ்வித முடிவும் எடுக்கப்படக்கூடாது என்ற ஐரோப்பிய தரவு பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 2020ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டுவரை ஐரோப்பாவில் நடந்த சம்பவங்கள் தொடர்பானது.
பிரான்சில் ஊபர் நிறுவனத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரிலிருந்து இது தொடங்கியது. எனினும், அமெரிக்காவின் இந்த வாகன முன்பதிவு நிறுவனத்தின் ஐரோப்பிய தலைமை அலுவலகம் ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ளதால், அந்த வழக்கு நெதர்லாந்தில் விசாரணை செய்யப்பட்டது.
இதற்கிடையே, தனக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


