தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டுரியான்களைக் கண்காணிக்கும் கட்டமைப்பு: பினாங்கு திட்டம்

1 mins read
d49cd5b2-571e-4ae7-81e0-4163bfe62a87
பிரபல பினாங்கு டுரியான்களைச் சுவைத்துப் பார்க்கும் வெளிநாட்டினர். - கோப்புப் படம்: ஊடகம்

கோலாலம்பூர்: மலேசியாவின் பினாங்கு மாநிலம் போலியான டுரியான்களின் விற்பனையை முடக்க டுரியான் கண்காணிப்புக் கட்டமைப்புக்கு ஜூன் முதலாம் தேதியிலிருந்து பதிவு செய்துகொள்ளும்படி அவற்றைப் பயிரிடுவோரிடம் அறிவுறுத்தியுள்ளது.

டுரியான் விற்பனையில் உள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த 200 டுரியான் விவசாயிகளுக்கு டிராக் அண்ட் டிரேஸ் (Track and Trace) என்ற கட்டமைப்பைக் கட்டாயமாக்க பினாங்கு மாநிலம் திட்டமிடுகிறது.

கிட்டத்தட்ட 60 டுரியான் விவசாயிகள் கட்டமைப்பைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். கட்டமைப்பின் மூலம் ஒவ்வொரு டுரியான்மீதும் ஒரு கியூஆர் குறியீடு ஒட்டப்படும். அதை வருடும்போது எந்தப் பண்ணையிலிருந்து அது வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

உள்ளூர் விவசாயிகள் பினாங்கு டுரியான்கள் தவறாகக் கையாளப்படுவது குறித்தும் மற்ற டுரியான்கள் பினாங்கிலிருந்து வந்தவை என்று குறிப்பிடப்படுவது குறித்தும் புகார் அளித்ததை அடுத்து கண்காணிப்புக் கட்டமைப்பு அறிமுகம் காண்கிறது.

மலேசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் சுவையான டுரியான்கள் மிகப் பிரபலம்.

சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டுரியான்களை ஏற்றுமதி செய்யும் மலேசியா, 2030ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட $547.5 மில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதிகளை எட்ட இலக்கு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்