2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் புதிய கிரிக்கெட் மைதானம் தயாராகிறது:ஐசிசி

2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் புதிய கிரிக்கெட் மைதானம் தயாராகிறது:ஐசிசி

1 mins read
கிரிக்கெட் விளையாட்டு 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இடம்பெறவுள்ளது
ddd76f5d-d914-4b49-a160-fb8464820b60
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள எல்ஏ மெமொரியல் கொலுசியம் விளையாட்டரங்கத்தின் தீபத்தூண். - படம்: ராய்ட்டர்ஸ்

வருகின்ற 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளில் கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தின் கட்டுமானம் தொடங்கியுள்ளதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் ( ஐசிசி) புதன்கிழமை (ஏப்ரல் 23) தெரிவித்தது.

128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் கலிபோர்னியாவின் பொமொனா நகரில் அமைந்துள்ள தற்காலிக மைதானத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான போட்டிகள் நடைபெறும். 20 ஓவர் முறைப்படி, அதில் தலா ஆறு குழுக்கள் இரு பாலினத்திலும் போட்டியிடும்.

“ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் கனவுகளுடனும் பெருமையுடனும் கிரிக்கெட் விளையாட்டை இணைத்து, அதன் அங்கமாக்கி விரிவாக்குவது எங்களது நோக்கம்,” என்று ஐசிசி தலைவர் ஜே ஷா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜுலை மாதம் ஐசிசி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகளும் அதே விளையாட்டரங்கில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்