துருக்கி-சிரியா எல்லையில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் ஹாட்டே மாநிலத்தில் நேற்று இரவு 8 மணிவாக்கில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
சில நிமிடங்களுக்குப் பிறகு அப்பகுதியில் மீண்டும் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தில் மூன்று பேர் மாண்டதாகவும் 200க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் 47,000க்கும் அதிகமானோர் மாண்டனர்; பல கட்டடங்கள் தரைமட்டமாகின.
பெருந்துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அவ்விரு நாட்டு மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

