பத்துமலையில் 1,500 பேர் அமரக்கூடிய புதிய மண்டபம் திறப்பு

பத்துமலையில் 1,500 பேர் அமரக்கூடிய புதிய மண்டபம் திறப்பு

படம்: வணக்கம் மலேசியா

22 Feb 2026 - 7:40 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் பிரபலமான கோயிலான பத்து மலையில் 1,500 பேர் அமரும் வசதியுடன் கூடிய புதிய பலநோக்கு மண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

பத்து மலை வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள அந்த மண்டபம் மேடை, எல்இடி திரை விசாலமான இருக்கைகள் கொண்ட நவீன வசதிகளைக் கொண்டது. அங்கு 3, 4 பகுதிகளாக பிரித்து நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

திருமண விழாக்கள், கலாசார நிகழ்ச்சிகள், சமூகச் சந்திப்புகள், பொதுக் கூட்டங்களுக்கு மண்டபத்தைப் பயன்படுத்தலாம். முன்பதிவுக்கு பொது மக்கள், ஆலய நிர்வாக அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
பத்துமலைமலேசியாகோலாலம்பூர்மண்டபம்உலகம்