புதிய வரலாறு; சீனாவின் விண்கலத்தில் பாகிஸ்தானியர்

புதிய வரலாறு; சீனாவின் விண்கலத்தில் பாகிஸ்தானியர்

படம்: ராய்ட்டர்ஸ்

25 Nov 2026 - 3:14 pm

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் ‘ஷென்ஷூ-24’ விண்கலம் புதன்கிழமை (நவம்பர் 25) காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

விண்கலத்தில் பயணம் செய்யும் மூவர் அடங்கிய குழுவில் பாகிஸ்தானியக் குடிமகன் ஜீஷான் அலியும் இடம்பெற்றுள்ளார்.

அதன் மூலம், சீனாவின் தியங்கோங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையை ஜீஷான் பெறுகிறார்.

வடமேற்குச் சீனாவில் உள்ள ஜியுசுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து காலை 8.18 மணிக்கு லாங் மார்ச்-2எஃப் உந்துகணை மூலம் விண்கலம் விண்ணில் பாய்ச்சப்பட்டது.

40 வயது விமானியான ஜீஷான், பூமியின் சுற்றுப்பாதைக்குச் செல்லும் முதல் பாகிஸ்தானியர் ஆவார். ஆய்வுக் கருவிகள் நிபுணராகப் பணியாற்றும் அவர், அங்கு ஐந்து முதல் 10 நாள்கள் வரை தங்கியிருந்து சோதனைகளை மேற்கொள்வார்.

அவருடன் சீனத் தளபதி டாங் ஹோங்போ, விமானப் பொறியாளர் வு யி ஆகியோர் சென்றுள்ளனர்.

நாசா தலைமையிலான அனைத்துலக விண்வெளி நிலையம் 2030ஆம் ஆண்டில் ஓய்வு பெறக்கூடும் என்ற நிலையில், அனைத்துலக ஒத்துழைப்புக்கான மையமாகத் தியங்கோங் நிலையத்தைச் சீனா முன்னிலைப்படுத்தி வருகிறது.

இந்தப் பயணத்திற்காக பெய்ஜிங்கில் ஏழு மாதங்கள் திரு ஜீஷான் பயிற்சி பெற்றார். அப்போது அவர் சீன மொழி வகுப்புகளில் பங்கேற்று, சீனப் பாடல்களைக் கற்றதுடன் சீனக் கவிதைகளையும் படித்து வியப்பில் ஆழ்த்தினார்.

குறிப்புச் சொற்கள்