இணைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் அமல்

இணைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் அமல்

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

25 Nov 2026 - 9:58 pm

1 mins read

சிட்னி: தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே நீக்கத் தவறும் இணைய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா அமல்படுத்தியுள்ளது.

அச்சட்டத்திற்கு இணங்க மறுக்கும் நிறுவனத்திற்கு அதன் உலகளாவிய வருமானத்தில் ஐந்து விழுக்காடு வரை அல்லது $72 மில்லியன் அபராதம் விதிக்கப்படும்.

ஓராண்டில் நடப்பிற்கு வரும் இணையவழிப் பாதுகாப்புக் கடமைச் சட்டம், மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யும் என அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

முன்னதாக, 16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடையை ஆஸ்திரேலியா விதித்தது. செய்தி உள்ளடக்கங்களுக்குக் கட்டணம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது.

“தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் இனியும் மாயையில் இருக்க முடியாது; மக்களைப் பாதுகாப்பது அவற்றின் பொறுப்பு,” என அந்நாட்டுத் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ் தெரிவித்தார்

இருப்பினும், ஆஸ்திரேலியாவின் அச்சட்டம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எனச் சிலர் எச்சரித்துள்ளனர்.

சட்டம் தெளிவற்றதாக உள்ளதாகவும், போலி கணக்குகள் மூலம் கண்காணிக்கும் அதிகாரம் தனிநபர் அந்தரங்கத்திற்குப் பாதிப்பு எனவும் தொழில்துறைக் குழுவான டிஜி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்