தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வரைபடத்தைச் சமர்ப்பித்துள்ள டைட்டன் நீர்மூழ்கி நிறுவனம்

2 mins read
72632d51-b96c-4572-ba7b-cdc52e7d1ad7
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் ஜூன் 18ஆம் தேதி வெடித்தது.  கப்பலில் பயணம் செய்த ஐவரும் மாண்டனர் - படம்: ராய்ட்டர்ஸ்

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் அண்மையில் உள்நோக்கிய வெடிப்புக்கு உள்ளானது. அச்சம்பவத்தில் அந்நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த ஐவரும் மாண்டனர்.

கடலுக்கு அடியில் உள்ள டைட்டானிக் கப்பலையும் அதன் கலைப்பொருள்களையும் பொதுமக்களுக்கு சுற்றிக்காட்டும் சேவையை டைட்டன் நிறுவனம் பிரத்தியேகமாக வழங்கிவந்தது.

இந்நிலையில் அந்த நிறுவனம், வெடித்த நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் வரைபடத்தை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சமர்ப்பித்துள்ளது.

வரைபடத்தில் இருந்த படங்கள் ஆர்எம்எஸ் நிறுவனத்தின் நிபுணர்களின் உதவியால் உருவாக்கப்பட்டது. அதில் நீர்மூழ்கிக் கப்பல் எங்கு வெடித்தது, அது டைட்டானிக் கப்பல் அருகே செல்ல எவ்வளவு தூரம் இருந்தது போன்ற விவரங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. 

வரைபடத்தில் உள்ள தகவல்கள் தனிப்பட்ட மற்றும் பொதுவெளியில் உள்ள தரவுகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒன்று என்று ஆர்எம்எஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் பிரையன் வேய்கர் தெரிவித்தார். 

கடலோரக் காவற்படை, தேசிய பெருங்கடல் நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புகள் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் குறித்து இதுவரை எந்தத் தவறுகளையும் சுட்டிக்காட்டவில்லை என்று அவர் கூறினார். கொடுக்கப்பட்ட தரவுகள் நம்பகத்தன்மையுடன் உள்ளவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு இனி அரசாங்கம் விசாரணை நடத்தும். 12 முதல் 18 மாதங்களுக்குப்பின் விசாரணையின் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் ஜூன் 18ஆம் தேதி வெடித்தது. 

டைட்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், 58 வயது பிரிட்டிஷ் செல்வந்தர் ஹமீஷ் ஹார்டிங், நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் 77 வயது பிரான்சின் பால்-ஹென்ரி நார்கியோலெ, பிரிட்டனில் பிறந்த பாகிஸ்தானியச் செல்வந்தரான 48 வயது ஷஷாதா தாவூத், அவரது 19 வயது மகன் சுலைமான் ஆகியோர் டைட்டன் கப்பலில் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்