இரண்டு மாதங்களுக்குள் புதிய கட்சி: ரஃபிஸி ரம்லி

இரண்டு மாதங்களுக்குள் புதிய கட்சி: ரஃபிஸி ரம்லி

1 mins read
c11db07d-10c3-4150-9d64-9c2edf9204a8
பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி. - படம்: ஃப்ரி மலேசியா டுடே

கோலாலம்பூர்: அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு புதிய அரசியல் கட்சியை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்போவதாகவும், அது ஒருதலைப்பட்சமான முடிவாக இருக்காது என்றும் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான சிறந்த வழியை இன்னும் ஆராய்ந்து வருவதாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

நண்பர்களுடன் கலந்தாலோசித்த பிறகு ஜூன் மாதம் ஒரு முடிவை எடுப்பதாக தாம் அவர்களுக்கு உறுதியளித்திருப்பதாக, சனிக்கிழழையன்று அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தனது முடிவு, நாடாளுமன்ற மற்றும் பிரிவு மட்டத்தில் உள்ள தனது நண்பர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இது நாம் அனைவரும் சேர்ந்து மதிப்பிட வேண்டிய ஒரு விஷயம். இது அதிகார வேட்கை பற்றியது அல்ல, நாங்கள் மாற்றங்களைக் காண விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

கடந்த மே மாதம் துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படத் தவறிய பிறகு, பிகேஆர் தலைமையுடனான ரஃபிஸியின் உறவுகள் மோசமடைந்தன. அன்று முதல் அவர் அரசாங்கத்தையும் கட்சியையும் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.

அரசாங்கத்தையும் கட்சியையும் விமர்சித்ததற்காக அவர் பதவி விலக வேண்டும் என்று பலமுறை அழைப்புகள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது தொகுதியில் பிகேஆர் கட்சி இடைத்தேர்தலைத் திணிக்க முயல்வதாக அவர் அண்மையில் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பிகேஆர் கட்சியிலிருந்து விலகி, தமது பண்டான் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக ரஃபிஸி சூசகமாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பிகேஆர்நாடாளுமன்ற உறுப்பினர்கட்சி