சோல் - தென்கொரியாவின் புதிய அதிபர் லே ஜே முங் தமது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை வியாழக்கிழமை (ஜூன் 5) நடத்தியுள்ளார். நாட்டின் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் குடும்பங்களுக்கு உதவவும் அவசரத் தொகுப்புத் திட்டம் குறித்து அவர் கலந்துரையாடினார்.
ராணுவச் சட்டத்தை அறிவித்த முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அண்மையில் நடைபெற்ற திடீர் தேர்தலில் திரு லீ புதிய அதிபராக நேற்று பதவியேற்றார்.
நாட்டு மக்கள் சிரமத்தை எதிர்கொள்வதால் முன்னாள் அரசாங்கம் விட்டுசென்ற அமைச்சரவைக்கு வீணடிக்க நேரமில்லை என்று திரு லீ குறிப்பிட்டார்.
திரு லீ இதுவரை அரசியல் ரீதியான நட்புகொண்ட சட்டமன்ற முன்னோடியைப் பிரதமராக நியமித்துள்ளார். அரசாங்கம் சுமுகமாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் அமைச்சரவையை அமைக்க அவர் துரிதமாக செயலாற்றுகிறார்.
அதிபர் அலுவலகத்துக்குள் நுழைந்த திரு லீ, கணினிகள், பேனா போன்ற பல உபகரணங்கள் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு திகைத்துப்போனார்.
பொருளியல் மீட்சிக்கு முதலிடம் கொடுக்கும் திரு லீ, வளர்ச்சியை ஊக்குவிக்க உடனடியாக குறைந்தது 30 டிரில்லியன் வான் தொகையை ஒதுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமராக நியமிக்கப்பட்ட திரு கிம் மின் சோக், 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியைவிட நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“இன்று, பொருளாதாரம் சரிந்து தேங்கியிருக்கிறது. எனவே இன்னும் பல சிரமங்கள் ஏற்படும் என்று நினைக்கிறேன்,” என்று திரு கிம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பைத் தவிர்ப்பதில் முன்னாள் அரசாங்கம் பெரியளவில் முன்னேற்றம் காணவில்லை. அமெரிக்காவின் வரி தென்கொரியாவின் ஆட்டோ, மின்சாதனங்கள், எஃகு ஆகிய பெரிய ஏற்றுமதிகளைப் பாதிக்கும்.
தென்கொரியா இத்தனை ஆண்டுகளில் கண்டிராத சவால்களைப் புதிய அதிபர் லீ எதிர்கொள்வதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்றதை அடுத்து ஏற்பட்ட காயம், அமெரிக்காவின் எதிர்பாரா வரிவிதிப்பு ஆகியவை அவற்றுள் சில.