இன்ஸ்டகிராமில் பதின்ம வயதினர் பாதுகாப்பிற்குப் புதிய எச்சரிக்கை வசதி

இன்ஸ்டகிராமில் பதின்ம வயதினர் பாதுகாப்பிற்குப் புதிய எச்சரிக்கை வசதி

1 mins read
34417446-7ade-4819-8d09-1ec08f5dba4f
இன்ஸ்டகிராம் செயலியின் புதிய சின்னம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

இன்ஸ்டகிராம் தளத்தில் பதின்ம வயதினர் உயிரை மாய்த்துக்கொள்வது அல்லது தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக்கொள்வது தொடர்பான சொற்களைக் கொண்டு குறுகிய காலத்தில் அடிக்கடி தகவல் தேடினால், அவர்களின் பெற்றோருக்கு அதுகுறித்து எச்சரிக்கை அனுப்பும் புதிய வசதி உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. பதின்ம வயதினரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு உதவி தேவைப்படுவதைப் பெற்றோருக்குத் தெரியப்படுத்துவதும் பிரச்சினையைக் கையாளத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதும் இதன் முதன்மை நோக்கமாகும். இந்தப் புதிய எச்சரிக்கைகளைப் பெற, பெற்றோர் இன்ஸ்டகிராமின் குடும்ப மையப் பிரிவில் உள்ள கண்காணிப்பு அமைப்பின் வழியாகத் தங்களது கணக்கைச் சிறார்களின் கணக்குடன் இணைக்க வேண்டும். மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் அல்லது செயலியின் நேரடி அறிவிப்பு மூலம் பெற்றோருக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்படும். பதினாறு வயதிற்குட்பட்ட சிறார்கள் தங்களது உள்ளடக்க அமைப்பின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும். மெட்டா நிறுவனத்தின் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து இந்த வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவில் மார்ச் மாதத்திலும் ஐரோப்பா, பிரேசில், இந்தியாவில் மே மாதத்திலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி, தற்போது உலகளவில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. மெட்டா ஏஐ உதவிச் செயலியிலும் இத்தகைய உரையாடல்களைக் கண்டறியும் எச்சரிக்கை வசதியைப் புதிதாக ஏற்படுத்தித் தர மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்