தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூயார்க் டைம்ஸ்: 3 மாதங்களில் 350,000 மின்னிலக்கச் சந்தாதாரர்கள்

1 mins read
3aebf69d-06e4-4233-99e9-f32b84958676
புதியவர்களையும் சேர்த்து மின்னிலக்கs சந்தாதாரர் எண்ணிக்கை 11.4 மில்லியனுக்கு அதிகரித்ததாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவில் வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தித்தாள் ஒரே காலாண்டில் 350,000க்கும் மேற்பட்ட மின்னிலக்கச் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது.

2024 இறுதிக் காலாண்டில் இணைந்த அவர்களையும் சேர்த்து அதன் மொத்த மின்னிலக்கச் சந்தாதாரர் எண்ணிக்கை 11.4 மில்லியனுக்குக் கூடியது.

புதிய சந்தாதாரர்களால் ‘நியூயார்க் டைம்ஸ்’ நிறுவனத்தின் ஆண்டு வருவாய் கடந்த ஆண்டு US$2.6 பில்லியனாக அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு அது US$2.4 பில்லியனாக இருந்தது.

2024ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இணைந்த 350,000 மின்னிலக்கச் சந்தாதாரர்கள் மூலம் மட்டும் US$726.6 மில்லியன் (S$985 மில்லியன்) கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 5) கூறியது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அது 7.5 விழுக்காடு அதிகம்.

ஆண்டு முழுவதும் கிடைத்த லாபம் US$455.4 மில்லியன். இது, 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 16.8 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்