நியூசிலாந்தில் ஒப்பனைப் பொருள்களில் நீண்டகால ரசாயனங்களுக்குத் தடை

நியூசிலாந்தில் ஒப்பனைப் பொருள்களில் நீண்டகால ரசாயனங்களுக்குத் தடை

1 mins read
2b767ea5-b560-4e5e-8477-f3cc124cb383
நகப்பூச்சு, சவரக் களிம்பு, உதட்டுச்சாயம் போன்ற பொருள்களில் அந்த ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: ஒப்பனைப் பொருள்களில் தீங்கு விளைவிக்கும் நீண்டகால ரசாயனங்களுக்குத் தடை விதிக்கவிருக்கும் முதல் சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று என சுற்றுப்புற ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

‘பிஎஃப்ஏஎஸ்’ எனும் நீண்டகால ரசாயனங்களை 2027ஆம் ஆண்டுக்குள் தடைசெய்யப்போவதாக சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆணையம் கூறியது.

நகப்பூச்சு, சவரக் களிம்பு, உதட்டுச்சாயம் போன்ற பொருள்களில் அந்த ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த ரசாயனங்கள் காலப்போக்கில் உடலில் வளரக்கூடும் என்றும் அவை புற்றுநோய், கருவுறாமை போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்