நியூசிலாந்தை தாக்கிய சூறாவளியில் 8 பேர் பலி

1 mins read
030475be-52c4-4bef-8ab1-c5fa4c211a7e
படம்: ராய்ட்டர்ஸ் -

நியூசிலாந்தை தாக்கிய சூறாவளியில் குறைந்தது எட்டு பேர் மாண்டனர். கிட்டத்தட்ட 10,000 பேர் பாதிக்கப்பட்டனர். இங்கு ஏற்பட்ட ஆக மோசமான சூறாவளி இது எனக் கருதப்படுகிறது. மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பல வீடுகள், பண்ணைகள், பாலங்கள், கால்நடைகள் சூறாவளியில் அடித்துச்செல்லப்பட்டன. மக்கள் பலர் தங்கள் வீட்டுக் கூரைகளின் மேல் சிக்கிக் கொண்டனர்.

பல இடங்களில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு உணவு, குடிநீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை கொண்டுசேர்ப்பது தலையாய பணியாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

மக்களை மீட்க படகுகளும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.