வெலிங்டன்: நியூசிலாந்தில் வரவிருக்கும் மூன்று மாதங்களில் தீவிர வெப்பநிலை மாற்றங்கள், மாறுபட்ட மழைப்பொழிவு போன்றவை ஏற்படும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கு ‘எல் நினோ’ காலநிலையே காரணம் என்றும் இதனால் நாட்டின் இரண்டு முக்கியத் தீவுகளின் கிழக்கே வெப்பமான சூழல் நிலவும் என்றும் நியூசிலாந்தின் தேசிய நீர், வளிமண்டல ஆய்வுக் கழகம் கூறியது.
வடக்குத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் இயல்பைவிட மழை குறைவாகவும் தெற்குத் தீவின் மேற்கே இயல்பைவிட மழை அதிகமாகவும் பெய்யக்கூடும் என அது மேலும் குறிப்பிட்டது.
இதனால், நியூசிலாந்தில் பால் உற்பத்தியும் விலங்குகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

